சீனாவை விசாரிக்க கோரும் வேலன்சுவாமிகள்!
கோத்தபாய அரசுக்கு அரசுக்கு கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜகநாத் கொலம்பகேயை சர்வதேச பொறிமுறை ஊடாக விசாரணை செய்ய வேண்டும் என பொத்துவில் பொலிகண்டி ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழின படுகொலையை நிகழ்த்திய சிறிலங்கா அரசுக்கு இலங்கையில் வைத்தே சீன இரு இடங்களில் இருந்து ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக முன்னாள் கடற்படை தளபதி கொலம்பகே கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.
அவருடைய கருத்து மிகவும் பாரதூரமானது தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்ட இன அழிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்கள் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தது.
அது மட்டுமல்லாது இறுதி யுத்தத்தில் பாவிக்கப்பட்ட கிளஸ்டர் மற்றும் பொஸ்பரஸ் குண்டுகள் எங்கிருந்து பெறப்பட்டது யார் அதை வழங்கியிருப்பார்கள் என்பது தொடர்பிலும் முன்னாள் கடற்படை தளபதியை சர்வதேச ரீதியாக விசாரணை செய்ய வேண்டும்.

Post a Comment