இங்கிலாந்தில் தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதின: ஓட்டுநர் பலி! 99 பேர் காயம்!


லண்டனுக்கு வடக்கே இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் தொடருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் 99 பேர் காயமடைந்தனர். 

வெள்ளிக்கிழமை பிற்பகல் பெட்ஃபோர்டுக்கு தெற்கே ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் தொடருந்து சேவையால் இயக்கப்படும் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது. தீயணைப்பு வீரர்களும் அவசரகால மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த விபத்தில் தொடருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். 99 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 32 பேர் படுகாயமடைந்தனர். 56 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.


சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட புகைப்படங்களில், மக்கள் தலையில் கட்டுப் போட்டிருந்தது காணப்பட்டது. சேதமடைந்த இரண்டு ரயில்களும் தண்டவாளத்தில் அப்படியே நிற்பதையும் காண முடிந்தது.

மோதலில் ஈடுபட்ட ரயில்கள் முறையே கார்பி மற்றும் நாட்டிங்ஹாமில் இருந்து வந்து, செயின்ட் பான்கிராஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் ரயில்வே தெரிவித்துள்ளது. செயின்ட் பான்கிராஸுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து ரயில்களும் வெள்ளிக்கிழமை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை சேவை எவ்வாறு தொடரும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


A421 மற்றும் A6 சாலைகளுக்கு இடையே உள்ள எல்ஸ்டோ சந்திப்பிற்கு சற்று தெற்கே ஏற்பட்ட மோதலை அடுத்து, நேற்று ஒரு பெரும் சம்பவம் அறிவிக்கப்பட்டது; காவல்துறை மற்றும் மருத்துவ ஹெலிகாப்டர்களுடன் சுமார் 70 தீயணைப்பு வீரர்கள், 20 ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

இந்தச் சம்பவத்தைத் தொடருந்து பதிலளித்த பெட்போர்டு மருத்துவமனையும், லூட்டன் மற்றும் டன்ஸ்டபிள் பல்கலைக்கழக மருத்துவமனையும், உண்மையான மருத்துவ அவசரநிலை இருந்தால் தவிர தங்கள் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு நோயாளிகளை வர வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டன.

இந்தச் சம்பவத்தில் கிழக்கு மிட்லாண்ட்ஸ் ரயில்வேயின் (EMR) இரண்டு ரயில்கள் சம்பந்தப்பட்டிருந்தன. இதில், குறைந்தது 20 ஆண்டுகள் பழமையான கிளாஸ் 360 ரயிலின் முன்பகுதி, டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட கிளாஸ் 810 ரயிலின் பின்பகுதியை மோதியது.

No comments