வவுனியா போராட்டம்:வெற்றியா? தோல்வியா?
வவுனியா மாநகரசபை முதல்வரின் பதவி நீக்கத்தை கண்டித்தும் வடக்கு ஆளுனருக்கு எதிராகவும் வவுனியாவில் கடையடைப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் பதவி நீக்கத்தை கண்டித்தும், வடக்கு ஆளுனருக்கு எதிராகவும் வவுனியா நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் முழுமையாக வெற்றி பெற்றிருக்கவில்லையென சுயாதீன தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக வர்த்தக நிலையங்களை மதியம் வரை பூட்டுமாறும், பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான கோரிக்கைனள் விடப்பட்டிருந்தன.
விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய வடக்கு ஆளுனரின் செயற்பாட்டை கண்டித்து வவுனியா நகரப் பகுதியில் இருந்த வர்த்தக நிலையங்களில் ஒரு பகுதி வர்த்தக நிலையங்பள் சுமார் 3 மணிநேரம் மூடி தமது எதிர்ப்பை வெளிபடுத்தி இருந்தன.. ஏனைய வர்த்தக நிலையங்கள் வமை போல் செயற்பட்டிருந்தன.
அதேவேளை வவுனியா மாநகரசபை முதல்வரின்; உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுனருககு ஏதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அங்கிருந்து மன்னார் வீதி வழியாக ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நின்று கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
வடக்கு மாகாண ஆளுனரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிட்டப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் வவுனியா மாநகரசபை முதல்வர்; சு.காண்டீபள் அவர்களின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் பறிக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோதரராதலிங்கம், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment