வவுனியா-மன்னார்:மக்கள் பிரதிநிதிகளிற்கு தீர்வு!



வவுனியா மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் ஆட்சேபனை தெரிவித்து எதிரணியால் தொடரப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை நீக்கி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வவுனியா மாநகர சபையின் முதல்வர் பிரதி முதல்வரின் செயற்பாடுகளுக்கான தடை உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்தது.

வழக்குக்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டிருந்த நிலையில் மாநகர சபை இயங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி இடைக்கால தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் முதல்வர் தலைமையில் சபை இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதி முதல்வர் தொடர்பான இடைக்கால தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது.

எனினும் பிரதி முதல்வர் பதவி விலகல் கடிதத்தை வழங்கினால் அதனை ஏற்றுக் கொள்வதற்கான அனுமதியும் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் எதிர்வரும் 19ஆம் திகதி மாநகர சபை தொடர்பான இறுதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மன்னார் நகரசபை தவிசாளருக்கு எதிராக வடக்கு ஆளுநர் அலுவலகத்தினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட தனிநபர் விசாரணை பொறிமுறையும் கைவிடப்பட்டுள்ளதாக யாழ்.மேல்நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments