அம்மணமாக்கி அடிக்கிறனர்:சுரேஸ் சாலே கண்ணீர்!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் ஆடைகளின்றி நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒப்புக்கொண்டுள்ளதாக சுரேஸ் சலேயின் மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.
நேற்று (16) இடம்பெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணையின் போதே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அதனை ஒப்புக்கொண்டதாக இன்று (17) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சலேயின் மனைவி தெரிவித்துள்ளார்.
மார்ச் 8 ஆம் திகதி கைது நடைபெற்றதிலிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம்; குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வந்தது.
எனினும், முந்தைய விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதால் சமீபத்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வின் போது, திணைக்களம் குற்றச்சாட்டை முறையாக ஒப்புக்கொண்டுள்ளதாக சுரேஸ் சாலேயின் மனைவி தெரிவித்துள்ளார்.
இதனிடையே நிர்வாணமாக்கப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்டமை தொடர்பிலான ஒப்புதலைத் தொடர்ந்து, தொடர்புடைய சிசிடிவி காட்சிகள், சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அத்தகைய நெறிமுறைகளை வழிகாட்டும் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கைகளை வழங்குமாறு ஆணையம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரியுள்ளது.
இதனிடையே ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை திசைதிருப்ப சதிகள் முன்னெடுக்கப்பவதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார்.

Post a Comment