திருவள்ளுவரும் தமிழரிற்கில்லை?



யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தை கொழும்பு அரசிடம் கையளிப்பதில் இந்திய தூதரகம் உறுதியாக இருப்பதாக தமிழரசு கட்சி தலைமைகள் எச்சரித்துள்ளன.

இதனிடையே யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரக தலையீட்டையடுத்து யாழ்.மாநகரசபையினால் பரிந்துரைக்கக்கப்பட்ட புத்திஜீவிகள் பலரும் திருவள்ளுவர் கலாச்சார மண்டப பணிப்பாளர் சபையில் பங்கெடுக்க மறுத்துவருகின்றனர்.

இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் தூதரக மட்டத்தில் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தை கொழும்பு அரசிடம் கையளிப்பதில் காட்டப்படும் முயற்சிகளிற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் சந்திப்புக்கள் மூலம் தமிழ் தரப்பினை குளிர்விக்க இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் ஜா யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சந்திப்புக்களை நடாத்திவருகின்றார்.

ஆவர் இன்றையதினம் (04) யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்திற்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

துறைமுகத்திற்கு விஜயம் செய்த இந்தியத் தூதுவர், அங்கு நங்கூரமிடப்பட்டிருந்த 'சிவகங்கை' பயணிகள் கப்பலைப் பார்வையிட்டார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இக்கப்பல் போக்குவரத்துச் சேவை குறித்தும், அதன் வசதிகள் குறித்தும் பயணிகளிடம் நேடியாகக் கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்டதாக கூறப்படுகின்றது.

சந்திப்பின் போது திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தை தாண்டி காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைத்து தருவாதாக  கடந்த 16வருடங்களாக இந்திய அரசு காண்பித்துவரும் நாடகம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.


No comments