கோத்தா-ஆசாத் நட்பு புகைப்படம் சான்றாக?
தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ஆணையை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கோட்டபாய –ஆசாத் மௌலான சந்திப்பு புகைப்படம் சான்று பொருளாக கையளிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் கைது நடவடிக்கையைத் தடுப்பதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, சட்டமா அதிபர் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மற்றும் அசாத் மௌலானா ஆகியோரின் கூட்டுப்புகைப்படம் முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் அப்புகைப்படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது தனது கட்சிக்காரருக்கு நினைவில் இல்லை என கோட்டபாய தரப்பு மறுதலித்துள்ளது.
2017-ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அசாத் மௌலானா கோத்தபாயவை சந்தித்திருந்தார்.
இலங்கையில் கோத்தபாயாவால் முன்னெடுக்கப்பட்ட சட்டத்தரணிகள் மற்றும் முக்கிய அரசியல் படுகொலைகள் உள்ளிட்ட பல சம்பவங்கள் குறித்து அசாத் மௌலானா கூறியிருந்த அறிக்கைகள் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான மேலதிக விசாரணை, ஜூலை 6-ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment