புத்தூரில் டிப்பர் விபத்து - படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு ; மேலும் இருவர் அதிதீவிர சிகிச்சையில்


யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் - முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

குறித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புத்தூர் வீதியில் மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கி  பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் , முச்சக்கர வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானது. 

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் , மீட்கப்பட்டு , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் 

வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த நிலையில் , ஏனைய இருவருக்கும் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments