வடக்கில் காணி மோசடிகளில் ஈடுபடுபவர்களில் 9 பிரசித்த நொத்தாரிசுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
வடக்கில் காணி மோசடிகளில் ஈடுபடும் 9 பிரசித்த நொத்தாரிசுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், காணி ஆவணங்கள் தொடர்பான விசேட பயிற்சிகளைத் தமது புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் விசேட அழைப்பின் பேரில், பதிவாளர் நாயகத்துடனான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
அதன் போதே பொலிஸார் அவ்வாறு தெரிவித்தனர்.குறித்த கலந்துரையாடலில்,
2022ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், யாழ்ப்பாணம் - 1874, மன்னார் - 958, கிளிநொச்சி - 570, முல்லைத்தீவு - 321 மற்றும் வவுனியா - 116 ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கலாக வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 3,839 வெளிப்படுத்தல் உறுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை 2023ஆம் ஆண்டு 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 15 வழக்குகள் நிறைவுற்றன, 2024 ஆம் ஆண்டு 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 25 வழக்குகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் , 6 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது. 2025ஆம் ஆண்டு 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 6 வழக்குகள் நிறைவுடைந்துள்ள நிலையில், 14 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது. அத்துடன் 2026ஆம் ஆண்டு மே மாதம் வரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு வழக்கு நிறைவைடைந்துள்ளது, 8 வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment