ஈரான் மீது அமெரிக்கா தற்காப்புத் தாக்குதலை நடத்தியது: ஈரானும் பதிலுக்குத் தாக்கியது!


தெற்கு ஈரானில், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைக்கும் படகுகள் உள்ளிட்டவற்றின் மீது தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானியப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து நமது படைகளைப் பாதுகாப்பதற்காக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்நிறுத்தத்தின் போது இராணுவம் நிதானத்தைக் கடைப்பிடித்து வருகிறது என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலதிக விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.

இதேநேரம் தற்பாதுகாப்புக்காக ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் ஈரானின் வான் எதிர்ப்பு சாதனங்களும் வேலை செய்தன.

தங்கள் வான்வெளிக்குள் நுழைந்த அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானம் மற்றும் ஒரு போர் விமானத்தை இடைமறித்ததாக ஈரானின் புரட்சிகரக் காவலர்கள் (IRGC) கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானிய வான்வெளிக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை வான் பாதுகாப்புப் பிரிவுகள் சுட்டு வீழ்த்தியதாகவும்,  F-35 போர் விமானம் ஈரானிய வான்வெளியிலிருந்து தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.

No comments