மன்னாரை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி!!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்தி பவனி இன்று வெள்ளிக்கிழமை (15) காலை மன்னாரை வந்தடைந்தது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக ஆரம்பமான ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக வவுனியா சென்று நான்காவது நாளான இன்று வெள்ளிக்கிழமை மன்னாரை வந்தடைந்தது.
மன்னார் பேருந்து தரிப்பிடம் மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலை வீதி ஆகிய இரு இடங்களிலும் குறித்த ஊர்தி நிறுத்தப்பட்ட நிலையில் அங்கு மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அத்துடன் நகர வீதியூடாக சென்ற ஊர்தி பவனி யை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற மக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.



Post a Comment