யாழ்,பல்கலையில் நினைவாயுதம்
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "நினைவாயுதம்" ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் ஜந்து மாவட்டங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் மே 16ம் திகதி முதல் மே 18ம் திகதி வரை நினைவாயுதம் - ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே "கந்தகபூமி உயிர் வலியின் மொழி" கவிதைப் போட்டியை நடத்தினோம்.
முள்ளிவாய்க்காலில் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பான ஆதாரபூர்வமான தரவுகள், ஒளிப்படங்கள் மற்றும் ஆவணங்களை இளையோர் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு வரலாற்றுப் பதிவாக நாங்கள் கண்காட்சியை நடத்தவுள்ளோம் - என்றனர்.

Post a Comment