சம்மி குணரத்ன-9 புலனாய்வு அதிகாரிகளுக்கு விசாரணை!





பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் மற்றும் காணாமல் போதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கிரித்தலே இராணுவ முகாமின் முன்னாள் தளபதி சம்மி குணரத்ன மற்றும் 9 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிரான சாட்சிய விசாரணையை, கொழும்பு உயர் நீதிமன்றத்தின் ட்ரையல் அட்பார் மே 8 அன்று மீண்டும் தொடங்கவுள்ளது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிரந்தர மூவரடங்கிய உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேனவின் தலைமையில் இந்த நிரந்தர மூவரடங்கிய நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான நயனா செனவிரத்ன, நலின் ஹேவாவசம் மற்றும் லக்மாலி ஹேவாவசம் ஆகியோர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகிந்த ஆட்சி காலமான 2010 ஜனவரி 24ஆம் திகதி இரவு பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments