மீண்டும் பதற்றம்: ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்
ஈரானின் பார்ஸ் மாகாணத்தின் லார் நகரின் வான்வெளி பரப்பில் இஸ்ரேலின் ஹெர்ம்ஸ் 900 ரக டிரோன் பறந்தது. இந்த டிரோன் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் நவீன வான்வெளிப் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கைக்கு அப்பாற்பட்டு அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் விமானமும், ட்ரோன்களும் ஈரான் வான்வெளிக்குள் நுழைவது என்பது போர் நிறுத்த மீறலாக கருதப்படும். இதற்கு உறுதியான முறையில் பதிலடி கொடுக்கப்படும். தற்போது இஸ்ரேலின் போர் நிறுத்த விதிமீறல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.
இதனிடையே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் இலக்கு மறைவிடங்கள் மீது 100 வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் லெபனான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது. இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டை ஈரான் மறுத்ததுடன், ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ஆதரவு பெறும் பிற போராளிக் குழுக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களையும் உள்ளடக்கிய அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Post a Comment