ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுக்குள் வைத்திருக்கக்கூடாது - பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஈரான் போர் தொடர்பான மேலதிகப் பேச்சுவார்த்தைகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு வந்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்டுக்கான தனது பயணத்தின் போது, ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுக்குள் வைத்திருக்கக் கூடாது என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வளைகுடா நட்பு நாடுகளிடம் கூறினார்.
வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகளுடன் நடந்த பிராந்திய பாதுகாப்பு கலந்துரையாடலின் போது, இந்த மோதல் குறித்த தனது நிலைப்பாட்டில் இங்கிலாந்து உறுதியாக இருந்து வருவதாக ஸ்டார்மர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், பதற்றத்தைத் தணிக்கவும், நீடித்த போர்நிறுத்தத்திற்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
ஹோர்முஸ் ஜலசந்திப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
லெபனான் மீதான தொடர்ச்சியான இஸ்ரேலியத் தாக்குதல்கள் ஒப்பந்தத்தின் கடுமையான மீறல்" என்று ஈரான் கூறிவரும் நிலையில், அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் நெருக்கடியில் உள்ள வேளையில் அவரது வருகை அமைந்துள்ளது.
ஸ்டார்மர் ஏற்கனவே ஜெட்டாவில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துள்ளார், மேலும் அவர் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானும் அமெரிக்காவும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதால், ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி (IRGC), தனது அனுமதியின்றி ஜலசந்தி வழியாகச் செல்லும் எந்தக் கப்பல்களும் குறிவைக்கப்பட்டு "அழிக்கப்படும்" என்று கூறியுள்ளது. அதே நேரத்தில், ஜலசந்தி மூடப்பட்டுவிட்டதாகக் கூறும் செய்திகள் தவறானவை என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார்.

Post a Comment