ஈரான் போரை அல்ல, பேச்சுவார்த்தையையே நாடுகிறது: அதிபர் பெஷெஷ்கியன்
தன் நாடு போரை நாடவில்லை. மாறாக பேச்சுவார்த்தையையே நாடுகிறது என்றும் அமெரிக்கா தனது விருப்பத்தைத் திணிக்கவோ அல்லது ஈரானை சரணடையச் செய்யவோ செய்யும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும் என்றும் ஈரான் அதிபர் பெஷெஷ்கியான் கூறியதாக ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.
சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமானக் கோட்பாடுகளின் கட்டமைப்பிற்குள், பொதுமக்களையும், உயர்மட்டத்தினரையும், குழந்தைகளையும் குறிவைப்பதற்கும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய மையங்களை அழிப்பதற்கும் என்ன நியாயம் இருக்கிறது? என்று பெஷேஷ்கியன் மேலும் கூறினார்.

Post a Comment