லெபனால் பெய்ரூட்டில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழப்பு
பெய்ரூட் பகுதியில் இஸ்ரேல் நடத்திய இரண்டு தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் இன்று புதன்கிழமை தெரிவித்தது.
தெற்கு பெய்ரூட்டின் ஜ்னா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
தலைநகருக்குச் சற்று தெற்கே உள்ள கல்தே பகுதியில் வாகனம் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம், பெய்ரூட் பகுதியில் இரண்டு தனித்தனித் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஒருவரையும், அந்த அமைப்பின் மற்றொரு உறுப்பினரையும் குறிவைத்ததாகக் கூறியுள்ளது. ஆனால், அவர்களை அடையாளம் காட்டவோ அல்லது துல்லியமான இடங்கள் குறித்த விவரங்களை அளிக்கவோ இல்லை.
மத்திய கிழக்கு போரில் இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் லெபனான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Post a Comment