ஹோர்முஸ் நீர்வழிப் பாதையில் சுங்கக் கட்டண முதல் வருவாயை தெஹ்ரான் பெற்றது!


ஹோர்முஸ் நீர்வழி வழியாக செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரிகள் மூலம் தனது நாட்டின் மத்திய வங்கி முதல் வருவாயைப் பெற்றுள்ளதாக அறிவித்ததாக ஈரானின் நாடாளுமன்றத் துணை சபாநாயகர் ஹமித்ரெஸா ஹஜிபாபாயி கூறியதாக ஈரானின் அரை அதிகாரப்பூர்வமான தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீர்வழிப் பாதை சுங்கக் கட்டணங்கள் மூலம் பெறப்பட்ட முதல் வருவாய் மத்திய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது என அந்த அறிக்கை தெரிவித்தது.

பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, இந்த முக்கிய நீர்வழிப்பாதை வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்காக பெரும்பாலும் மூடப்பட்டே உள்ளது. 

இந்த நீர்வழிப்பாதையின் மீதான ஈரானின் பிடியைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் ஏப்ரல் 13 முதல் இந்த நீர் வழித் தடத்தை ஒரு புதிய அமெரிக்க முற்றுகையை விதித்தது அது இன்றும் நடைமுறையில் உள்ளது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ள முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடம் மூடப்பட்டதால், எண்ணெய், எரிவாயு மற்றும் எரிபொருட்களின் உலகளாவிய விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

No comments