அமெரிக்கா அவமானப்பட்டு சரணடையும் வரை போர் தொடரும் - ஈரான் சூளுரை
ஈரான் போரில் இருந்து அமெரிக்கா விரைவில் வெளியேறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் இன்று 34-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், டிரம்ப் தனது நாட்டு மக்களுக்கு முதல் முறையாக உரையாற்றினார். அதில், இலக்குகளை நாங்கள் நெருங்கிவிட்டோம். போரை இன்னும் வேகமாக முடிப்போம். 2 முதல் 3 வாரங்கள் ஈரானை மிகவும் கடுமையாக தாக்க போகிறோம். ஜலசந்தியை பாதுகாக்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா உதவும் என்றார்.
இந்தநிலையில், ஈரானின் இராணுவத் திறனை முழுமையாக மதிப்பிடத் தவறிய அமெரிக்காவும், இஸ்ரேலும் பேரழிவுகரமான தாக்குதல்களை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவடைந்து, நிரந்தரமான வருத்தத்திற்கு ஆளாகி சரணடையும் வரை இந்தப் போர் தொடரும் என ஈரானை அழித்துவிட்டதாக டிரம்ப் கூறியதற்கு ஈரான் ராணுவம் சூளுரைத்துள்ளது.

Post a Comment