ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படையினர் கைப்பற்றினர்
ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே அமெரிக்கக் கடற்படை விதித்த முற்றுகையைத் தவிர்க்க அந்தக் கப்பல் முயன்றதாக, அவர் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எங்கள் கடற்படைக் கப்பல், இயந்திர அறையில் தாக்குதலை நடத்தி அவர்களை இருந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தியது," என்று டிரம்ப் எழுதினார்.
டூஸ்கா எனப் பெயரிடப்பட்ட அந்தக் கப்பலை அமெரிக்கக் கடற்படையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும், கப்பலில் என்ன இருக்கிறது என்பதைப் பார்த்து வருகின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
இக்கப்பல் சீனாவிலிருந்து கடந்த மார்ச் மாதம் புறப்பட்டு ஈரான் சென்றடைய இருந்தாகக் கூறப்படுகிறது.

Post a Comment