பல்கேரியா தேர்தல்: ரஷ்ய ஆதரவாளர் வெற்றி பெறும் நிலையில் உள்ளார்


முன்னாள் ஜனாதிபதி ரூமென் ரதேவ் தலைமையிலான முற்போக்கு பல்கேரியா கட்சி, பல்கேரியாவில் பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் எனத் தெரிகிறது.

91.7% வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், அந்தக் கட்சி 44.7% வாக்குகளைப் பெற்று, மற்ற கட்சிகளை விட கணிசமான முன்னிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ முடிவுகள் காட்டின.

கட்சியின் செயல்பாடு எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளதுடன், இது அண்மைக்காலங்களில் எந்தவொரு கட்சியும் பெற்ற மிகப்பெரிய நாடாளுமன்ற ஆணைகளில் ஒன்றாகத் தோன்றுகிறது.

240 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ரதேவின் கட்சி 130 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

முற்போக்கு பல்கேரியாவின் வாக்கு எண்ணிக்கை, ஐரோப்பிய ஆதரவுக் கட்சியான மாற்றத்தைத் தொடர்வோம்-ஜனநாயக பல்கேரியா (PP-DB) கூட்டணியையும், முன்னாள் பிரதமர் போய்கோ போரிசோவத் தலைமையிலான, நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் மைய-வலதுசாரிக் கட்சியான பல்கேரியாவின் ஐரோப்பிய வளர்ச்சிக்கான குடிமக்கள் அல்லது GERB கட்சியையும் விட முன்னிலையில் உள்ளது.

பெரும்பான்மையைப் பெறுவதற்காக பிபி-டிபி தரப்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், அதே சமயம் சிறுபான்மை அரசாங்கத்திற்கும் இடமிருப்பதாகவும் ரதேவ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பல்கேரியாவில் ஒரு ஒழுங்கான மற்றும் நிலையான அரசாங்கம் அமைவதற்காக, நாங்கள் பல்வேறு வழிமுறைகளைப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

பல்கோியாவின் முன்னாள் விமானப்படை ஜெனரல். பல்கேரியாவின் அதிபராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகிந்தார். தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனவரியில் பதவி விலகியவருமான ரதேவ், நாட்டில் உள்ள குழு ஆட்சி முறை என்று அவர் அழைப்பதை எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்துள்ளார்.

மாஸ்கோவின் துருப்புக்களின் தொடர்ச்சியான படையெடுப்பை எதிர்த்துப் போராடும் உக்ரைனுக்கு வழங்கப்படும் இராணுவ உதவியை விமர்சித்த அதேவேளையில், பல்கேரியா ரஷ்யாவுடன் உறவுகளைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

இருப்பினும், அவர் ரஷ்யாவின் படையெடுப்பை அதிகாரப்பூர்வமாக கண்டித்ததோடு, தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் கீவ்விற்கான ஐரோப்பிய ஒன்றிய உதவியைத் தடுக்க தனது நாட்டின் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பசுமை ஆற்றல் கொள்கையையும் ரதேவ் எதிர்க்கிறார்.

No comments