ஈரான் வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கிறது - டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில், ஈரான் தற்போது கடுமையான உள்நாட்டுச் சீர்குலைவைச் சந்தித்து வருவதாகக் கூறியுள்ளார்.
தனக்குக் கிடைத்த தகவல்களின்படி, ஈரான் தனது ஆட்சி அமைப்பு மற்றும் தலைமைத்துவத்தில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், இது குறித்து அவர்கள் அமெரிக்க அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாகவும் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், டிரம்பின் இந்தக் கூற்றுக்கு ஈரான் அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலையும் அளிக்கவில்லை.

Post a Comment