ஈரானுக்கு ஆதரவளிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவிப்பு


ஈரான் தற்போது சந்தித்து வரும் கடினமான காலகட்டத்தை வெற்றிகரமாகக் கடந்து வரும் என்று நம்புவதாகவும், அதற்குத் தாம் ஆதரவளிப்பதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடனான சந்திப்பின்போது ரஷ்ய அதிபர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஈரான் வெளியுறவு அமைச்சருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்றது. அங்கு ஈரான் வெளியுறவு அமைச்சருக்கும் ரஷ்ய அதிபருக்கும் இடையே அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதற்கிடையில், ரஷ்யாவிற்கு வந்தடைந்த ஈரான் விமானத்திற்கு மினப் 168 என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் பெயரிட்டிருந்தார்.

No comments