நைஜீரியா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் கடத்தப்பட்டனர்
வடமத்திய நைஜீரியாவின் பெனூ மாநிலத்தில், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை எழுதச் சென்ற பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் துப்பாக்கி ஏந்தியவர்களால் கடத்தப்பட்டதாக அப்பகுதி ஆளுநர் நேற்று வியாழக்கிழமை இரவு தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருப்பதாகக் கருதுகிறார்கள் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கு எந்த முயற்சியையும் விட்டுவிட மாட்டோம் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ள நிலையில், காவல்துறையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
இப்பகுதி முழுவதிலும் உள்ள தேர்வர்கள் பதற்றமான சூழலுக்கு மத்தியில் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
17 மாணவர்கள் காணாமல் போனதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment