1500ற்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் 5 இளைஞர்கள் கைது
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 5 இளைஞர்களும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 1500ற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது.

Post a Comment