பிள்ளையானை தண்டியுங்கள்:ஆதரவாளர்கள?
பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சிறையில் முன்னெடுத்துள்ளதாக கூறப்படும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக ஆதரவாளர்களும் அடையாள சத்தியாகிரகப் போராட்டத்தை இன்று நடத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று போராட்டம் இடம்பெற்றிருந்தது.
பிள்ளையானை தகுதியான சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் எனவும்,; கைதிகளுக்கான வசதிகளை வழங்க வேண்டும் எனவும் ஆதரவாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அடையாள சத்யாக்கிரக போராட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளையாவது பிள்ளையானுக்கும் வழங்க வேண்டும் எனவும், வேறு சிறைக்கு அவரை மாற்றி அவருக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிள்iளான் குற்றம் செய்திருந்தால் அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

Post a Comment