நெடுந்தீவில் ஆர்ப்பாட்டம்!



நெடுந்தீவிற்கு ஆளுநர் மற்றும் அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று திரும்பியுள்ள நிலையில் நாளை வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, நாளைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்படவுள்ளதாக பொது அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் இருந்து   ஆரம்பமாகும் போராட்டப்   பேரணியானது நெடுந்தீவு பிரதேச செயலகம் வரை சென்று, அங்கு முடிவுறவுள்ளது

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தீவின் முக்கியமான தனியார் போக்குவரத்துச் சங்கங்கள் தமது சேவைகளை இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளன.

நெடுந்தீவிற்கான தனியார் கடற்போக்குவரத்துச் சேவைகள் நாளை முழுமையாக இடம்பெறாது. உள்ளூர் தரைவழிப் போக்குவரத்துச் சேவைகள் முடக்கப்படும்.   சுற்றுலாப் பயணிகளுக்கான வாகனச் சேவைகளும் நாளை நிறுத்தப்படும்.அதன் காரணமாக, நாளை நெடுந்தீவுக்கான மற்றும் உள்ளூர் தனியார் போக்குவரத்துச் சேவைகள் எவையும் இயங்காது எனப் போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

நெருக்கடி காலங்களில் ஈபிடிபி ஆதரவு பெற்ற பிரதேசமாக நெடுந்தீவு அடையாளப்படுத்தப்பட்டிருந்த போதிலும் தற்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் வசம் உள்ளுராட்சி அதிகாரமுள்ளது.


No comments