மீண்டும் மீண்டும் சிக்கும் அனுர அரசு!
நிலக்கரி ஊழலைதொடர்ந்து இலங்கைத்திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் நிதி கணினி ஹேக்கர் ஒருவரின் கைக்கு கிடைத்துள்ளதா என்பது குறித்து நாடாளுமன்றத்தின் ஊடாக விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்திய அரசிற்கு மீளளிக்கவேண்டிய கடன் தப்பித்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் 2025 செப்டம்பர் மாத இறுதியில் 22.9 மில்லியன் டொலர் கடன் தொகையை செலுத்த வேண்டியிருந்த நிலையில், அதில் ஒரு பகுதியான 2.5 மில்லியன் டொலர் தொகையை திறைசேரியானது 2025 டிசம்பர் முதல் 2026 ஜனவரி 31 வரையான காலப்பகுதிக்குள் செலுத்தியுள்ளது. அந்த நிதி உரிய கடன் வழங்குநருக்கு (நாடு) செல்லாமல், கணினி ஹேக்கர் ஒருவரிடமோ அல்லது மூன்றாவது தரப்பினரிடமோ சென்றுள்ளதாக அறிய முடிகிறது.
தற்போது, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ‘தொழில்நுட்ப விசாரணை குழு’ ஒன்று 2026.03.24 அன்று அல்லது அதனை ஒட்டிய காலப்பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக திறைசேரியின் இரு பிரதிப் பணிப்பாளர்கள், இரு பணிப்பாளர்கள் மற்றும் கணினிப் பிரிவின் பிரதானி ஒருவர் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தாங்கள் அறிந்தபடி, அண்மைக்காலம் வரை வெளிநாட்டு கடன், தவணைக்கட்டணம் மற்றும் வட்டி செலுத்தும் நடவடிக்கைகள் இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்டன. புதிய நிதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அந்தப் பொறுப்பு வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மற்றும் அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி, இந்த கொடுப்பனவு தொடர்பான ஆவணங்களை தயாரித்ததும், கொடுப்பனவுகளை மேற்கொண்டதும் அந்த நிறுவனங்களே ஆகும்.
அரச நிதி தொடர்பான இறுதிப் பொறுப்பு நாடாளுமன்றத்திற்கே உரியது. பொருத்தமான வழிமுறையூடாக இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணையை முன்னெடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Post a Comment