இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிப்பு - டிரம்ப்
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இரு நாடுகளின் தூதர்களுடன் நடந்த அரிதான சந்திப்பைத் தொடர்ந்து, இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்தார்.
சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஹிஸ்புல்லாவிடமிருந்து லெபனான் தன்னைத் தற்காத்துக் கொள்ள உதவுவதற்காக, அமெரிக்கா அந்நாட்டுடன் இணைந்து செயல்படப் போகிறது என்று டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
ஆரம்ப 10 நாள் போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை அமுலுக்கு வந்தது, அது திங்கட்கிழமை முடிவடைய இருந்தது.
இந்த ஆண்டு இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு பெரும் வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் மேலும் கூறினார்.
அண்மையில் இஸ்ரேல் பிரதமர் பிபி நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் ஆகியோரை வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவுகள் இல்லை. அவ்விரு நாடுகளும் கடைசியாக 1993-ஆம் ஆண்டு நேரடி, உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தின.

Post a Comment