ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கக் கப்பல்களை ஈரான் மூழ்கடிக்கும் - மொஹ்சென் ரெஸாயி


போர் நிறுத்தம் என்ற கருத்தை எதிர்க்கும் ரெஸாயி கூறினார்: டிரம்ப் ஹோர்முஸ் ஜலசந்தியின் காவலராக ஆக விரும்புகிறார். இது உண்மையிலேயே அவருடைய வேலையா? இது அமெரிக்கா போன்ற ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தின் வேலையா? என கேள்வி எழுப்பியுள்ளார் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உயர்மட்ட இராணுவ ஆலோசகரான மொஹ்சென் ரெஸாயி.

ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றின்போது அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் விடுத்தார்.

எங்களின் முதல் ஏவுகணையே அமெரிக்க இராணுவத்திற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. உங்களுடைய கப்பல்கள் நிச்சயமாக எங்கள் ஏவுகணைகளுக்கு இலக்காகலாம். மேலும் எங்களால் அவற்றை அழிக்கவும் முடியும் என அவர் கூறினார்.

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதற்கு டிரம்ப் தனது சொந்த முற்றுகையின் மூலம் பதிலளித்துள்ளார். அந்த குறுகிய நீர்வழியில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நேரடி ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவிற்கு ஒரு பெரும் கவலையாக இருப்பதுடன், ஈரான் அதனைத் தூண்டிவிடுவதாகவும் தெரிகிறது.

ஐ.ஆர்.ஜி. அமைப்புக்குள்ளேயே ஒரு தீவிரப் பழமைவாதி என்ற பெயரைப் பெற்றுள்ள ரெஸாயி, அமெரிக்காவின் தரைவழிப் படையெடுப்பை வரவேற்பதாகக் கூறியதோடு, அப்படி ஒரு தரைவழி நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாங்கள் ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படையினரை பணயக்கைதிகளைப் பிடிப்போம் பின்னர் ஒவ்வொரு பணயக்கைதியை விடுவிக்க ஒரு பில்லியன் டாலர்கள் பெறுவோம் என்றும் கூறினார்.

1981 முதல் 1997 வரை ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைமைத் தளபதியாக இருந்த ரெசாயியை, கமெனி கடந்த மாதம் தனது உயர்மட்ட இராணுவ ஆலோசகராக நியமித்தார். 

No comments