கொழும்பில் மீண்டும் கோத்தா குண்டு!



அனுர அரசை கவிழ்க்கும் வகையில் மீண்டும் கொழும்பில் குண்டுத்தாக்குதல்களை நடாத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிப்பாணி இம்ரான் என்பவரின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்புப் பகுதியில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் கொழும்பினை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரென தகவல்கள் தெரிவித்துள்ளன.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கொழும்பில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்குத் திட்டமிட்டதாக கைதானவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பூர்வாங்க விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை காவல்துறை  தெரிவித்துள்ளது.

இதனிடையே தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில்

முன்னேற்றம் காணப்படுவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் தொடர்பாகத் தங்கள் கடமைகளை ஆற்றத் தவறிய ஜனாதிபதிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும்

காவல்துறையினர்; உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தபோதிலும்,சட்டமா அதிபரும் அவரது திணைக்களமும் நடவடிக்கை எடுப்பதை தாமதப்படுத்துவதாக கொழும்பு பேராயர்; கவலை வெளியிட்டுள்ளார்.


No comments