போர் தொடங்கினால் பிராந்தியத்தின் எண்ணெய்த் தொழிலை அழிந்துவிடுவோம் - ஈரான் எச்சரிக்கை
அமெரிக்காவுடன் மீண்டும் போர் மூண்டால், பிராந்தியத்தின் எண்ணெய் தொழிலை அழித்துவிடுவோம் என மூத்த ஈரானிய தளபதி எச்சரித்துள்ளார்.
புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் விண்வெளித் துறைத் தலைவரான ஜெனரல் மஜித் மூசாவி, ஈரானிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
ஈரானுக்கு எதிராக ஆக்கிரமிப்பை மேற்கொள்வது ஒரு தவறான முடிவாக இருக்கும் என்று கூறினார். மேலும், அமெரிக்கா தாக்குதல்களை நடத்த அண்டை நாடுகள் அனுமதித்தால், பிராந்தியத்தின் எண்ணெய் வசதிகள் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தெற்கு அண்டை நாடுகள், ஈரானைத் தாக்க எதிரி தங்கள் வசதிகளைப் பயன்படுத்த அனுமதித்தால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எண்ணெய் உற்பத்திக்கு அவர்கள் விடை சொல்ல வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.
இந்தப் பிராந்தியம் முழுவதும் உள்ள பல நாடுகளில் அமெரிக்கா தனது தளங்களையும் படைகளையும் கொண்டுள்ளது.

Post a Comment