உண்மையான பேச்சுவார்த்தைகளுக்கு முற்றுகை ஒரு தடையாக உள்ளது - ஈரான் அதிபர்


வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்க கடற்படை முற்றுகை முக்கிய தடைகளில் ஒன்றாகும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் கூறினார்.

வாக்குறுதி மீறல்கள், முற்றுகை மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவை உண்மையான பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத் தடைகளாக உள்ளன என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதினார்.

உங்கள் முடிவில்லாத பாசாங்குத்தனமான சொல்லாடல்களையும், கூற்றுகளுக்கும் செயல்களுக்கும் இடையிலான முரண்பாட்டையும் உலகம் காண்கிறது எனக் கூறினார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க இராணுவம் ஈரானிய துறைமுகங்களுக்கு எதிர் முற்றுகையை ஏற்படுத்தியுள்ளது. இதை, இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீறல் என ஈரான் கூறியுள்ளது.

No comments