தடுமாறுகிறது தமிழ் அரசியல்! தள்ளாடுகிறது தமிழரசு! பனங்காட்டான்
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தெரியாது தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. உட்கட்சி மோதல்இ பதவி மோகம்இ குழிபறிப்பு என்பவைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது தமிழரசுக் கட்சி. சிங்கள தேசத்தில் நிகழ்ந்த அதிரடி அரசியல் மாற்றம் தமிழ் மண்ணில் எப்போது சாத்தியமாகும்?
சிங்கள தேசத்தின் மூத்த இரண்டு கட்சிகளும் அவர்களுக்கு வாக்களித்த மக்களாலேயே காணாமலாக்கப்பட்ட வரலாற்றை முன்னர் ஒரு தடவை இங்கு எழுதியிருந்தேன்.
ஐக்கிய தேசிய கட்சியும்இ சிறீலங்கா சுதந்திர கட்சியுமே சிங்கள தேசத்தின் ஆதிக்கட்சிகள். இவர்களுக்கு ஏற்பட்ட கதி எவரும் எதிர்பார்க்காதது. ரணில் விக்கிரமசிங்க எழுபத்தைந்து வயதைத் தாண்டியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக் கதிரையை விட்டுக்கொடுக்காது கட்டிப்பிடித்திருக்கிறார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் யார் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. சந்திரிகா குமாரதுங்கதான் இப்போதும் தலைவராக இருப்பதாக பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்விரு கட்சிகளையும் ஓரந்தள்ளிவிட்டு ஜே.வி.பி.இ தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் ஆட்சியைக் கைப்பற்றி இரண்டாவது ஆண்டு பூர்த்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சிறீமாவோ அரசினாலும் (1971)இ ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசினாலும் (1987-1989) பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட ஜே.வி.பி.இ முன்னைய இரண்டு கட்சிகளை மட்டுமன்றி மகிந்தவின் பொதுஜன பெரமுனவையும் வீழ்த்திவிட்டு ஆட்சியில் அமர்ந்துள்ளது.
நெருக்கடியான வளைகுடா யுத்த வேளையில் இந்தியாஇ சீனாஇ ர~;யா மட்டுமன்றி ஈரானும்கூட இவர்களுக்கு சகல உதவிகளையும் வழங்க முன்வந்திருப்பதை பார்க்க முடிகிறது. ஊழல்இ அதிகார துஸ்பிரயோகம் என்பதற்கு அப்பால் நல்லுறவு என்ற ஒற்றை வார்த்தை அநுர அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இதனூடாக தமிழர் தேசிய அரசியலை நோக்கும்போது அதன் போக்கு தமிழ் மக்களின் நலனில் அக்கறை காட்டுவதைவிட தங்களுக்குள் பிசகுப்பட்டு கழுத்தறுப்புகள் நடத்துவதிலேயே காலத்தைக் கடத்துவதை காணமுடிகிறது.
ஐக்கிய தேசிய கட்சியும் சிறீலங்கா சுதந்திர கட்சியும் எவ்வாறு சிங்கள தேசத்தின் மூத்த கட்சிகளாகப் பார்க்கப்படுகின்றனவோ அந்தப் பாரம்பரியம் தமிழரசுக் கட்சிக்கும் உண்டு. தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்தவர்களால் உருவாக்கப்பட்டது தமிழரசுக் கட்சி. தேர்தல் திணைக்களப் பதிவில் இலங்கை தமிழரசுக் கட்சி என்றும்இ தமிழ் மக்கள் மத்தியில் சம~;டிக் கட்சி என்றும் பெயர் சூட்டப்பட்டதற்கு அரசியல் காரணம் உண்டு.
இது உருவாக்கப்பட்ட காலத்தில் அதன் கொள்கையால் மக்கள் ஆதரவு இதன் பலமாகியது. ஆனாலும் தமிழ் காங்கிரஸை முழுமையாக அழித்துவிட முடியவில்லை. 1970 பொதுத்தேர்தலில் தமிழரக் கட்சியின் அ.அமிர்தலிங்கமும்இ தமிழ் காங்கிரஸின் மு.சிவசிதம்பரமும் தோற்கடிக்கப்பட்டதால் தமிழர் ஐக்கிய முன்னணி உருவாகியதாக வரலாறு கூறுகிறது. இதுவே பின்னாளில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாகிஇ தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து அதிகூடிய ஆசனங்களை வடக்கு கிழக்கில் பெற்றது. இதன் பின்னரான நிகழ்வுகள் சரித்திர பாடமாகியுள்ளது.
தொடர்ச்சியான அனைத்து மாற்றங்களையும் காலத்தின் தேவையாக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதேசமயம் தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகள் அதிகமாகி கொள்கைப்பற்று சிதறுண்டுபோன வேளையில் அனைத்துத் தமிழ் கட்சிகளையும் ஆயுதக்குழுக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டிய தேவை உருவானது. விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள்இ தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இதனை வெற்றிகரமாக நிறைவேற்றினர். தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற கட்சி என்ற வகையிலும் அதன் சின்னமான வீடு கூட்டமைப்பின் சின்னமாக்கப்பட்டதாலும் தமிழரசுக் கட்சிக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தலைமைத்துவம் கிடைத்தது.
2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதால் கூட்டமைப்பு மெதுமெதுவாக பிளவடைய ஆரம்பித்தது. அதன் பின்னரான சகல தேர்தல்களும் இந்தப் பிளவை வெளிப்படையாகத் தெரிய வைத்தன. எனினும்இ வெற்றிபெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் தமிழரசே முன்னணியில் நின்றதால் அதன் தலைமைத்துவம் மாற்றமின்றித் தொடர்ந்தது.
தமிழர் தேசத்தின் இன்றைய அரசியல் நிலைமை அவ்வாறே இருக்கிறதா? தமிழரசுக் கட்சி அந்தத் தலைமைப் பதவியை தொடர்ந்தும் தக்க வைக்கும் தகுதியில் இருக்கிறதா? அண்மையில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகளும்இ அதன் பின்னரும் முன்னருமான தேர்தல் கூட்டுகளும் அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவில்லையென்றே கூற வேண்டும்.
தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பதவிப் போட்டிகளும்இ கழுத்தறுப்புகளும் இதற்கான முதற்காரணமாக அடையாளம் காணப்படுகிறது. இறுதியாகஇ இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் அதன் பின்னரான தமிழரசுக் கட்சியின் தலைவர் போட்டியிலும் சுமந்திரனுக்குக் கிடைத்த தோல்வியே கட்சியை இன்றைய தேக்க நிலைக்கு அல்லது மீளமுடியாத நெக்கடிக்குள் சென்று கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணம் என்பதை கட்சிப் பிரமுகர்களே ஒப்புக் கொள்கின்றனர்.
சுமந்திரனையும் சிவஞானம் சிறீதரனையும் ஒன்றிணைக்க முடியாதவரை தமிழரசுக் கட்சி பிளவுண்ட நிலையிலேயே செல்லுமென உள்வீட்டுக்காரர்கள் ஏற்றுக் கொண்டாலும் சகஜ நிலைமையை ஏற்படுத்துவதில் எவருமே வெற்றி காணும் நிலை தென்படவில்லை. உருவாகியுள்ள பதவி மோகப் பிரச்சனையை தீர்த்து கட்சியை நேர்த்தியாகக் கொண்டு செல்ல வேண்டிய பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இவ்விடயத்தில் அக்கறை காட்டுவதாக இல்லையென்ற குறைக்கப்பால்இ சுமந்திரன் பக்கமாகவே இவர் சாய்ந்திருப்பதான ஒரு குற்றச்சாட்டு பொதுவெளியில் உண்டு. எல்லாம் நியதிப்படி நடைபெறும் என்பது இவரது போக்கு இப்போதைய கட்சிப் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்பதை அன்றாட நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன.
கட்சியை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் சுமந்திரன் தீவிரமாக உள்ளார். அதற்கு ஏதுவாக அவரது அன்றாட செயற்பாடுகள் காணப்படுகின்றன. கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவராகவிருந்த சிறீதரன் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டபின்இ சுமந்திரனின் நெருக்கமான சகாவான சாணக்கியன் அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாணக்கியன் றிமோட்டில் இயங்குவதாக பரவலாக சொல்லப்படுகிறது. இதில் உண்மையில்லாமல் இல்லை.
கொழும்பிலுள்ள கனடிய தூதுவரை சாணக்கியன் அண்மையில் தனிமையில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு அவரது தனிப்பட்ட முறையிலானது என்று வெளியில் பகிரப்பட்டது. கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவராக இருப்பவர் ஒரு வெளிநாட்டுத் தூதுவரை சந்திப்பது எவ்வாறு தனிப்பட்ட சந்திப்பாக இருக்க முடியும்? இதனை ஒரு தனிப்பட்ட சந்திப்பென்று முற்கூட்டியே அறிவித்திருந்தால் வெளிநாட்டுத் தூதுவர் இவரை சந்தித்திருப்பாரா? சிலவேளை சிறீதரன் இவ்வாறான ஒரு சந்திப்பை நடத்தியிருந்தால் அவர் மீது கேள்விக்கணை தொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் சாணக்கியனுக்கு....
வளைகுடா யுத்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்து பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம் என பதில் செயலாளர் சுமந்திரன் அறிவித்துள்ளார். வளைகுடா யுத்தம் ஆரம்பமாகி இரண்டு வாரங்களின் பின்னரே பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தனது தீர்மானத்தை எடுத்தது. தமிழ் மக்களின் தலையாய கட்சி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தமிழரசுக் கட்சி யுத்தம் ஆரம்பமாகி இரண்டு வாரங்களாகியும் தனது நிலைப்பாட்டை அறிவிக்காதது யாருடைய தவறு? கட்சி தனது முடிவை ஏற்கனவே அறிவித்திருந்தால் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தனது நிலைப்பாட்டை தவிர்த்திருக்கலாம் தானே.
ஓர் அரசியல் அமைப்பு என்பது எப்போதும் கூடுதலானவர்களை அரவணைத்து கட்சியை வளர்த்துச் செல்வதாக இருக்க வேண்டும். கட்சிக்குள் தீர்க்கப்பட வேண்டிய விடயங்களை பெரிதாக்கி ஊடகங்கள் ஊடாக அறிக்கை விடுத்துஇ உறுப்பினர்களிடம் விளக்கம் கோருவதும்இ உறுப்புரிமையை இடைநிறுத்தம் செய்வதும் கட்சியை சீரழித்து அழிப்பதாகவே அமையும். இதனையே தற்போதை தமிழரசின் தலைமைத்துவம் தனது தலையாய பணியாக செய்து வருகிறது.
இன்னொரு விடயம் முக்கியமானது. திருமலை புத்தர்சிலை விடயத்தில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கொண்ட நிலைப்பாடு தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று தமிழரசுக் கட்சி அவருக்கு தெரிவித்துள்ளது. அதாவதுஇ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை தமிழரசுக் கட்சி பகிரங்கமாக ஆதரித்து பரப்புரை செய்ததால் அவரது செயற்பாடு தமிழர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டதென்பது இதன் அர்த்தம். அதனால் சஜித் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென தமிழரசுக் கட்சி கோரியுள்ளது.
இது நியாயமான கோரிக்கை. அதற்கு முன்னர்இ ஆயிரம் விகாரைகளை வடக்கில் அமைப்பேன் என்று கூறிய சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்ததற்காகவும்இ தமிழ் மக்கள் அவருக்கே வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்யவேண்டுமென்று கோரியதற்காகவும்இ தமிழ் மக்களின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரனை தோற்கடிக்க வேண்டுமென பகிரங்கமாக வேண்டியதற்காகவும் தமிழரசுக் கட்சியும் சுமந்திரனும் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்பதை ஏனோ இவர்கள் மறந்துவிட்டார்கள்.
தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி பேசித் தீர்ப்பதற்காக இராப்போசனத்துக்கு வருமாறு தமிழரசுக் கட்சியினரை சஜித் பிரேமதாச அழைத்திருப்பதாகவும் அதனை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் இன்னொரு செய்தி சொல்கிறது. ஷநக்குண்டார் நாவிழந்தார்| என்பதை தலைமைக் கட்சிக்காரர்கள் நினைவில் கொண்டு செயற்பட வேண்டியது அவசியம். இல்லையேல் இராப்போசனத்துக்காக இன்னொரு நாளில் தமிழ் மக்களிடம் தமிழரசுக் கட்சி மன்னிப்புக்கோர நேரிடலாம்.
மொத்தத்தில் ஒரு விடயம் பளிச்செனவே தெரிகிறது. தமிழ்த் தேசிய அரசியல் திசை தெரியாது தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதன் தலைப்பனான தமிழரசுக் கட்சி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. சிங்கள தேசத்தில் நிகழ்ந்த அதிரடி அரசியல் மாற்றம் தமிழ் மண்ணில் எப்போது சாத்தியமாகும்?

Post a Comment