இரவில் விளக்குகளை அணைக்குக!
இலங்கையில் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துதல் தொடர்பில் மின்சாரம் மற்றும் வலுசக்தி பாதுகாப்பு அமைச்சு வழிகாட்டியை அனுப்பிவைத்துள்ளது. அதன்படி அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களில் பிற்பகல் 3.00 மணிக்கு அனைத்து குளிரூட்டிகளையும் அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும். அதே முறையில் செயல்படுமாறு; தனியார் துறையினரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இரவு 8.00 மணிக்குப் பின்னர், விளம்பரங்களுக்காக பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்சார ஒளிப்பலகைகள் மற்றும் திரைகளை அணைக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களினால் கட்டுப்படுத்தப்படும் வீதி விளக்குகளை பிற்பகல் 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதிக்குள் அணைப்பதற்குப் பொருத்தமான விசேட திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அனைத்து விதமான பெரிய அளவிலான விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இருந்து மின்சாரத்தைப் பெறாமல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற நிபந்தனைகள் இன்று விதிக்கப்பட்டுள்ளன..

Post a Comment