பாரிஸில் முறியடிக்கப்பட்ட குண்டு வெடிப்புச் சதித்திட்டம்: ஈரானா? சந்தேசிக்கிறது பிரான்ஸ்


பிரெஞ்சு தலைநகரான பாரிஸின் லா போயட்டி தெருவில் உள்ள பேங்க் ஆஃப் அமெரிக்கா கட்டிடத்திற்கு அருகில், தானே உருவாக்கிய வெடிகுண்டைப் புதைத்து வைத்து வெடிக்கச் செய்யத் தயாராக இருந்த ஒருவரைக் கைது செய்ததாக, சனிக்கிழமை காலை பாரிஸ் காவல்துறை தெரிவித்தது.

அவருடன் வந்த இரண்டாவது நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த வழக்கில் பிரெஞ்சு காவல்துறை மொத்தம் ஐந்து பேரைக் கைது செய்துள்ளது, அவர்களில் இருவர் திங்களன்று கைது செய்யப்பட்டனர்.

டெலிகிராம் செய்திச் சேவையில் ஹரகாத் அஷாப் அல்-யாமின் அல்-இஸ்லாமியா (HAYI) என்ற பெயரில் இயங்கும் இந்தக் குழு, ஒரு உண்மையான தீவிரவாத அமைப்பு அல்ல, மாறாக ஈரானிய உளவுத்துறையின் ஒரு முகப்புக் குழுவே என்று பிரெஞ்சு AFP செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய நிபுணர்கள் வாதிட்டுள்ளனர்.

கடந்த வாரம் யூத சமூக ஆம்புலன்ஸ்கள் மீது நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதலுக்கும், அந்தக் குழுவிற்கும் இடையே இருக்கக்கூடிய தொடர்பு குறித்தும் லண்டன் காவல்துறை விசாரித்து வருகிறது.

No comments