ஈரான் மீது டிரம்பின் புதிய மிரட்டல்: கடுமையான பதிலடி கொடுக்கப்படும் ஈரான்!


ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கார்க் தீவுக்கு  அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளத்தில் அச்சுறுத்தல் விடுத்த எழுத்தியுள்ளார்.

அத்துடன் ஈரானியத் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

ஈரானில் நமது இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ஒரு புதிய மற்றும் மிகவும் நியாயமான ஆட்சியுடன் வாஷிங்டன் தீவிரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என்று அவர் கூறினார்.

போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று ஈரான் பலமுறை கூறியபோதிலும், பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என டிரம்ப் கூறினார்.

இருப்பினும், விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டு, ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட்டால், ஈரானில் எங்களது இந்த தங்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, அவர்களுடைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு (ஒருவேளை அனைத்து கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கூட!) ஆகியவற்றை வெடிவைத்துத் தகர்த்து முற்றிலுமாக அழிப்போம் என்று அவர் எச்சரித்தார்.

ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தால் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் முன்னதாக அச்சுறுத்தியிருந்தார். ஆனால் அவர் அளித்த காலக்கெடு ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கார்க் தீவைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தெஹ்ரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடந்ததாக டிரம்ப் கூறிவரும் நிலையில், பேச்சுவார்த்தைகளை ஈரான் மறுப்பதுடன், தரைவழிப் படையெடுப்பிற்கு வாஷிங்டன் தயாராகி வருவதாகக் குற்றம் சாட்டி, கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

No comments