பாகிஸ்தான் கோரிக்கை: கொலைப் பட்டியலிருந்து நீக்கியதா இஸ்ரேல்
பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, ஈரானின் உயர்மட்ட தூதரும் அதன் நாடாளுமன்ற சபாநாயகரும் இஸ்ரேலின் கொலைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோரைக் குறிவைப்பது குறித்து இஸ்ரேல் பரிசீலித்ததாகவும், ஆனால் பேச்சுவார்த்தை நடத்த யாரும் இருக்க மாட்டார்கள் என எச்சரித்து, தலையிடுமாறு வாஷிங்டனை இஸ்லாமாபாத் வலியுறுத்தியதால், அந்தப் எண்ணத்தைக் கைவிட்டதாகவும் ஒரு பாகிஸ்தான் அதிகாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
அதன்பிறகு இஸ்ரேலை பின்வாங்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டதாக அந்த அதிகாரி கூறினார். இந்தக் கூற்றை யாராலும் சரிபார்க்க முடியவில்லை.
ஒரு நாள் முன்னதாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 15 அம்ச அமெரிக்கத் திட்டம் பாகிஸ்தான் வழியாக தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டதாக இஸ்லாமாபாத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனான அதன் உறவுகள் மற்றும் பிராந்தியத் தொடர்புகள் காரணமாக, பாகிஸ்தான் ஒரு சாத்தியமான மத்தியஸ்தராகக் கருதப்படுகிறது.

Post a Comment