ஈரான் சுற்றுலாப் பார்வையாளர் ஆஸ்ரேலியாவுக்குள் நுழைய இன்று முதல் தடை


ஈரானிலிருந்து வரும் சுற்றுலாப் பார்வையாளர்களுக்கு ஆஸ்திரேலியா விதித்த தடை இன்று முதல் தொடங்குகிறது.

ஈரானிலிருந்து வரும் சுற்றுலாப் பார்வையாளர்கள்  ஆஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இந்தத் தடை இன்று வியாழக்கிழமை, அமலுக்கு வருகிறது. 

ஈரானில் நடக்கும் போரின் காரணமாக, ஈரானியர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்பாமல் இருக்கவோ அல்லது வெளியேற முடியாமல் போகவோ அதிக ஆபத்து இருப்பதாக, இந்தத் தடையை அறிவித்த அரசாங்கம் கூறியது. 

ஒரு குறிப்பிட்ட வகை வருகை விசாவை (Subclass 600) வைத்திருக்கும் ஈரானியர்கள் ஆறு மாதங்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்வதை இந்தத் தடை தடுக்கிறது. 

No comments