யாழில். மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

நாவலர் வீதியை சேர்ந்த கனகரத்தினம் கனகதாசன் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார் 

கடந்த 18ஆம் திகதி யாழ். நகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , படுகாயமடைந்த நிலையில் , சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

No comments