துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா ஓய்வு பெற்றார்!

 


இன்றைய நாளுடன் உத்தியோகபூர்வமாக தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா.  

சிறிசற்குணராசா இலங்கை பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள ஹாட்லிக் கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு 1979 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 1983 ஆம் ஆண்டு கணிதத்தில் இளம் அறிவியல் நன்மதிப்புப் பட்டம் பெற்றார். மேலும் இவர் பலகோண ஈற்றணுகுகளுக்கான வெப்ப சமன்பாட்டின் வடிவக்கூறுகள் என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையைத் தயாரித்த பிறகு 1988 ஆம் ஆண்டு கெரியட் வாட் பல்கலைக்கழகத்தில்  முனைவர் பட்டம் பெற்றார். மேலும் 2004 ஆம் ஆண்டு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டயமும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, தற்போதைய உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும் கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி.வேல்நம்பி அவர்கள் நாளைய தினம் புதன்கிழமை பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments