முதலீட்டாளர்களை விரட்டும் வடமாகாணசபை?
முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் காணப்படுவதாக ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பசுமைக் காலநிலை நிதி, இழப்பு மற்றும் சேத நிதி, கடன் பரிமாற்றங்கள் மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்க்கக்கூடிய அபிவிருத்திப் பத்திரங்கள் போன்ற புதிய நிதியீட்டல் முறைகள் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு அதிகபட்ச உதவிகளை வழங்க ஐ.நா. தயாராகவுள்ளது.
முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக உள்ள கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
இதனிடையே கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண காணி ஆணையாளர், மாகாணத்தில் சுமார் 2 இலட்சம் காணி ஆவணங்கள் நடவடிக்கைகள் இன்றி தேங்கியிருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
கலந்துரையாடலில், ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment