செம்மணி பார்க்க ஜரோப்பிய குழு!
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழுவினர் தமது பயணத்தின் போது செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்; வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்திற்கு வருகை குழுவில் நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ருமேனியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி நிதிகள் குழு ஒன்றும் எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த செம்மணி புதைகுழி அகழ்வு பணிகள் நீண்ட இடைவெளியின் பின்னராக மீண்டும் அகழப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment