அமெரிக்கா - ஈரான்:இரு தரப்பிற்கும் அல்வா!
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலைமையைப் பேணி வருவதாக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
ஈரானுக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்தன. அதேவேளை, அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு அனுமதி கோரியிருந்தது.அமெரிக்க விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்தது.
சர்வதேச விவகாரங்களில் எவ்வித பக்கச்சார்புமின்றி நடுநிலைமையைப் பேணுவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளினதும் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதன் மூலம் நாம் எமது நடுநிலைத் தன்மையைப் பாதுகாத்துள்ளோம்," என அனுர தெரிவித்துள்ளார்.
இதனிடையே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மத்தியில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு 'நடுநிலைத்தன்மை' என்பதாகும்.
நாட்டின் கௌரவம், நீதி மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றை இந்த நடுநிலைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலமே உறுதிப்படுத்த முடியும். எத்தகைய அழுத்தங்கள் வந்தபோதிலும், இந்த நிலைப்பாட்டிலிருந்து நாம் பின்வாங்க மாட்டோமெனவும் அனுர தெரிவித்துள்ளார்.
Post a Comment