வறுமையில் இரட்டிப்பு:கிளிநொச்சி சாதனை!
இலங்கையின் தேசிய வறுமையினை விட இரட்டித்த வறுமையுள்ள மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
வினைத்திறனற்ற அரச நிர்வாகம் காரணமாகவும் வள பங்கீடு சீராக இல்லாமையினாலும் இத்தகைய நிலை தோன்றியுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கிளிநொச்சி மாவட்டத்தின் பொருளாதார நிலையை தரமுயர்த்தி அதனை வறுமை நிலையிலிருந்து மீட்க ஏராளமான திட்டங்களை முன்னெடுத்ததாக முன்னைய அரச ஆதரவு தரப்புக்கள் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளன.
வறுமை ஒழிப்பு விடயத்திலாவது கட்சி - அரசியல் பேதங்கள் கடந்து செயற்பட முன்வருமாறு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பெருந்தொகையாக வறுமையை அனுபவிக்கின்றனர். ஏராளம் குழந்தைகள் வறுமையில் உழல்கின்றன.ஆனால் அவை பற்றியெல்லாம் கண்டுகொள்ளதாக அரச நிர்வாக மட்டமே தற்போதுமுள்ளமையே அதற்கு காரணமென உள்ளுர் அரசசார்பற்ற தொண்டமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளன.


Post a Comment