செல்வத்திற்கு தலையிடி!

 




தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (27) திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட்போராட்டம், கட்சியின் மாவட்டக் காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமானது. அங்கிருந்து பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்ற அங்கத்தவர்கள், திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு முன்பாகத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் குதித்திருந்தனர்.

கட்சியின் யாப்பு விதிகளின்படி, தற்போதைய தலைவர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 23ம் திகதியன்றுடன் நிறைவடைந்துள்ளது. எனவே, தாமதமின்றி கட்சியின் 12-வது தேசிய மகாநாடு கூட்டப்பட வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையென ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

கட்சியின் புதிய நிர்வாகிகளின் தெரிவை அங்கீகரித்து, ஜனநாயக ரீதியாக மகாநாட்டை நடத்தி புதிய தலைமையை உருவாக்க வழிவிடுமாறு போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தனர்.


No comments