தியாகம் செய்ய வேண்டும்!


மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. மார்ச் 24 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய்  மற்றும் நெப்தா  ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் D ராஜகருண, இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 இது ஒரு பாரிய பிரச்சினை.  ஏப்ரல் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா வராது. அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த நெருக்கடியால் இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். எனவே, ஒரு விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளையும் அணைத்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கிறோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே எம்மால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் D ராஜகருண, இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 





No comments