தொடங்கியது கைது வேட்டை!





யாழ்ப்பாணத்திலுள்ள பகுதி நேர பத்தி எழுத்தர் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளாhர்.முறைகேடானவகையில் புலம்பெயர் தேசத்திலிருந்து நடைபெற்ற நிதி கைமாற்றத்தின் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக ஊடகநிறுவனங்களின் பேரினை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பாரிய நிதி மோசடிகளில் ஊடகவியலாளர்கள் மற்றும் போலி முகவர்கள் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாரிய நிதி கைமாற்றம் தொடர்பில் கைது அரங்கேறியுள்ள நிலையில் சிவில் அமைப்புக்கள் பேரில் செயற்படும் சிலரும் ஊடகவியலாளர்கள் போர்வையில் நிதி கைமாற்றத்தில் ஈடுபட்ட சிலரும் அடுத்து கைது செய்யப்படலாமென தகவல்கள் வெளிவந்துள்ளது.

 

 

No comments