சட்டத்தரணி கொலை சந்தேகநபர்கள் தப்பி சென்ற கார் கருகிய நிலையில் மீட்பு
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியையும், அவரின் மனைவியையும் சுட்டுக் கொலை செய்த சந்தேகநபர்கள் பயணித்தாக சந்தேகிக்கப்படும் கார் தீக்கிரையான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது.
காலி - அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் காரொன்று தீ பற்றி எரிவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு விரைந்த சந்தர்ப்பத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் கார் காணப்பட்டுள்ளது.
குறித்த கார் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , கார் சட்டத்தரணியையும் அவர் மனைவியையும் சுட்டுக்கொன்ற சந்தேகநபர்கள் தப்பி சென்ற கார் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment