பிக்குகளிற்கு பிணை!
திருகோணமலை கடற்கரைப்பகுதியில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர்கள் திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று (11) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலையின் டச்பே கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது.
கட்டுமானங்கள் அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கரையோர பாதுகாப்புத் திணைக்களம்; முறைப்பாடு செய்திருந்தது.
இந்நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையிலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட 4 தேரர்கள் மற்றும் 6 பொதுமக்கள் ஆகிய 10 பேருக்கும் திருகோணமலை குற்றவியல் மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கியுள்ளது.

Post a Comment